யாழ்ப்பாணம் கிராமிய வங்கி விரைவில் புதிய கட்டடத்தில்!

Sunday, February 4th, 2018

யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கிராமிய வங்கிக்கு என தனியான கட்டட வசதி அமைக்கும் பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன.

இந்தக் கூட்டுறவுக் கிராமிய வங்கி இதுவரை காலமும் சங்கத்தின் தலைமைக் கட்டடத்தின் மூன்றாம் மாடியில் இயங்கி வந்தது. வங்கியின் செயற்பாடுகள் மூன்றாம் மாடியில் இயங்கியதால் ஓய்வூதியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள், வயது முதிர்ந்த அங்கத்தவர்கள் மேல்மாடிக்குச் சென்று வருவதற்கு சிரமப்பட்டும் வந்தனர்.

இந்த நிலையில் வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் பொ.வாகீசன் சங்கத்தில் கிராமிய வங்கியை கீழ் மாடியில் உள்ள கட்டடத் தொகுதிக்கு இடம்மாற்ற வேண்டும் என்று சங்கத்தின் இயக்குநர் சபைக்கு ஆலோசனை ஒன்றை விடுத்தார்.

அத்துடன் கிராமிய வங்கி தற்காலத்திற்கு ஏற்ப அதன் செயற்பாடுகளை அதிகரிக்க வேண்டும். பொதுமக்களின் தொடர்புகளை வங்கிக்கு அதிகரிக்கும் முகமாகவும் சிரமம் இன்றி அதில் செயற்பாடுகளை மேற்கொள்ள வசதியாக வங்கிகள் அமையவேண்டும் என்றும் ஆணையாளர் தெரிவித்தார்.

Related posts:

மாணவர் பாடசாலை செல்வது குறைவு: பெற்றோரின் கூடிய கவனம் தேவை – சிறுவர் தின நிகழ்வில் யாழ்.அரச அதிபர்!
இலங்கையில் 9 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை – தேசிய தொற்று நோயியல் பிரிவு அறி...
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!