யாழ்ப்பாணம் கல்வி வலய விசேட கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் சர்வதேச மாற்று வலுவுடையோர் தின விழா!

யாழ்ப்பாணம் கல்வி வலய விசேட கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் சர்வதேச மாற்று வலுவுடையோர் தின விழா இன்று புதன்கிழமை(30) முற்பகல்-09.30 மணியளவில் யாழ்.நல்லூர் நாவலர் வீதியிலுள்ள சொர்ணாம்பிகை மண்டபத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் ந.தெய்வேந்திராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி-பி.செல்வி இறேனியஸ் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
விழாவில் யாழ்ப்பாணம் கல்வி வலயத்திற்குட்பட்ட விசேட கல்விப் பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.
குறித்த விழாவில் யாழ்ப்பாணம் கல்வி வலயத்தின் விசேட தேவையுடைய மாணவ,மாணவிகள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
Related posts:
தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - தேர்தல்கள் ஆணைக்கு அறிவிப்பு!
ஐ.நா பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பங்கேற்பு!
நாட்டில் பதின்ம வயதினரில் 40 சதவீதமானோர் மனநல நோயினால் பாதிப்பு - வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வ...
|
|