யாழ்ப்பாணத் தமிழே உலகில் விசேட தமிழாகக் கருதப்படுகின்றது- கல்வி இராஜாங்க அமைச்சர் பெருமிதம்!

Tuesday, July 5th, 2016

தமிழர்களின் உரிமைகளைப்  புரிந்து தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காகச் சில நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தற்போதைய ஆட்சியாளர்கள் ஆவல் கொண்டுள்ளனர். தமிழ் மொழியினை அடக்கி ஆள நினைத்தவர்களும் தற்போது மக்கள் மத்தியில் செல்லக்காசாக மாறியுள்ளனர். தமிழ் மொழியினை யாரும் அழித்துவிட முடியாது. வளர்ந்து வரும் மொழிகளிலொன்று இந்தத் தமிழ் மொழி. பத்துக்கோடி தமிழ் பேசுகின்ற மக்கள் வாழ்ந்தாலும் யாழ்ப்பாணத் தமிழே உலகத்தில் விசேட தமிழாகக் கருதப்படுகின்றது எனக் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

eaf882b0-78fd-4739-8ded-5da8044baab4

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில்  தமிழ் மொழித்தின விழா நேற்று (04) கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சி.விஷாகனன்   தலைமையில் இடம்பெற்ற போது  முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்காலத்தில் மாணவர்களின் கல்வி மேம்பட வேண்டும் என்ற வகையில் சிறந்ததொரு மாற்றத்திற்காகப்  பல்வேறு திட்டங்கள்   தற்போதைய  அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  எதிர்வரும் ஐந்து வருடங்களில் கல்வியில் ஒரு மறுமலர்ச்சியையும் ஒரு புரட்சியையும் ஏற்படுத்த வேண்டும் என்ற வகையில் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கல்வி அமைச்சினால் வடமாகாணத்தில் நான்காயிரத்து இருநூறு மில்லியன் ரூபா நிதி பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.  மொத்தமாக ஏழாயிரம் மில்லியன் ரூபா இந்த கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்தடவையாக இதில் பெரும் தொகையான பணம் வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.

37ce7ea4-3054-4cba-abdd-a6078b0a1ac9

Related posts: