தமிழ்மொழி அவசர சேவைக்கே அதிகளவான அழைப்பு – வன்னிப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயம்!

Friday, March 24th, 2017

வன்னியில் பொலிஸ் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கு 119 சேவையை விட அண்மையில் அறிமுகப்படுத்திய தமிழ்மொழி மூலமான அவசர பொலிஸ் சேவை இலக்கத்திற்கே மக்கள் அதிகளவில் முறைப்பாடுகளைத் தெரிவிக்கின்றனர். என வன்னிப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயததைஶ்ரீஶ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டதாவது,

வன்னிப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையின் கீழ் செயற்படும் அவசர பொலிஸ் சேவை தமிழ் மொழி பிரிவுக்கு இன்று வரை 312 முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.

இந்தச் சேவை கடந்த வருடம் 9ஆம் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. வன்னி மாவட்டம், கிளிநொச்சி போன்ற வெளி மாவட்ட அழைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 119சேவையைப் பெற்றுக்கொள்வதை விட தமிழ் மொழி மூலமாக சேவைக்கு அதிகளவானவர்களால் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடும்பப்பிணக்கு, சட்ட விரோத மரம் கடத்தல், சட்ட விரோதமாக மணல் கடத்தல், திருட்டு, வீதியில் இளைஞர்கள் அட்டகாசம், மது, கஞ்சா கடத்தல், விபத்துக்கள் போன்ற முறைப்பாடுகளே அதிகளவாகக் கிடைத்துள்ளன.

076 622 4949, 076 622 6363 என்ற 24 மணிநேரமும் செயற்படும் இந்தச் சேவைக்கு பொதுமக்கள் தயக்கமின்றி அழைத்து தமிழ் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Related posts:


யாழ் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்கள் நடத்த தடை -எடுக்கப்பட்டது இறுதித் தீர்மா...
மாற்றங்கள் செய்யப்படுவதற்கு முன்னர் நாடுகளுக்கு இடையில் ஒருமித்த கருத்துத் தேவை - ஜனாதிபதி ரணில் விக...
சி.டி.விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்புக் காலம் இன்றுடன் நிறைவு - புதிய பொலிஸ்மா அதிபரை ...