சி.டி.விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்புக் காலம் இன்றுடன் நிறைவு – புதிய பொலிஸ்மா அதிபரை நியமனம் செய்வது தொடர்பில் தீவிர ஆலோசனை!
Saturday, November 25th, 2023
பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்புக் காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் புதிய பொலிஸ்மா அதிபராக தேஷ்பந்து தென்னகோனை நியமிக்க அரசாங்கத்துக்குள் ஆலாசனைகள் இடம்பெற்றுள்ளன.
பொலிஸ்மா அதிபர் சி.டிவிக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு இன்று சனிக்கிழமையுடன் நிறைவடைய உள்ள நிலையில், புதிய பொலிஸ்மா அதிபரை நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
பொலிஸ்மா அதிபர் சி.டிவிக்ரமரத்னவுக்கு மூன்றாவது முறை வழங்கப்பட்ட சேவை நீடிப்பு இம்மாதம் ஆரம்பத்தில் நிறைவடைந்திருந்த நிலையில் அவருக்கு மேலும் 3 வாரங்களுக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டது.
அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் சி.டி.விக்ரமரத்னவின் பொலிஸ்மா அதிபர் பதவிக்காலம் நீடிக்கப்பட்டதாக அரசாங்கம் கூறியிருந்தது.
சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் இதற்கு முன்னதாக இரண்டு முறை, தலா 03 மாதங்கள் என்ற அடிப்படையில் நீடிக்கப்பட்டது. இதனை அரசியலமைப்பு சபையும் அங்கீகரித்திருந்தது.
ஆனால், இறுதியாக ஜனாதிபதியால் வழங்கப்பட்ட சேவை நீடிப்புக்கு அரசியலமைப்பு பேரவையின் ஒப்புதல் பெறப்படவில்லை என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தன.
அந்நிலையில் அவருக்கு நான்காவது முறையாக சேவை நீடிப்பு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு இன்றுடன் நிறைவடைகிறது. அதனால் புதிய பொலிஸ்மா அதிபரை நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஜனாதிபதியும் அரசாங்கமும் ஈடுபட்டுள்ளது.
இதேநெரம் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு மூன்று மூத்த டிஐஜிக்களுக்கு (Deputy Inspector General Of Police) இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால், புதிய பொலிஸ்மா அதிபருக்கான பெயர்கள் அரசியலமைபை்புப் பேரவைக்கு முன்மொழியப்படவில்லை.
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களான தேசபந்து தென்னகோன், லலித் பதிநாயக்க மற்றும் நிலந்த ஜயவர்தன ஆகியோரில் ஒருவர் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அடுத்த பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
000
Related posts:
|
|
|


