யாழ்ப்பாணத்தில் மேசன் தொழிலாளர் பயிற்சிக்கு விண்ணப்பம் கோரல்!

யாழ்.குடாநாட்டில் மேசன் தொழிலாளருக்கான பயிற்சி 2ஆவது தடவையாகவும் ஆரம்பிக்கப்படவுள்ளமையால் பயிற்சியில் பங்குபற்ற விரும்பும் தொழிலாளர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்தில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் போர் முடிந்து சமாதான சூழ்நிலை உருவானமையைத் தொடர்ந்து கட்டட வேலைகள் வேகமாக இடம்பெற்று வருகின்றன. எனினும் தேவைக்கேற்ப தரமான மேசன் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதனால் கட்டட வேலைகளில் தடங்களும் தாமதமும் ஏற்படுகின்றன. இந்நிலைக் குறித்து குறித்துக் கவனம் செலுத்தியுள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மேசன் தொழிலை மேம்படுத்தும் நோக்குடன் மேசன் தொழிலாளர்களுக்கு 3மாதக் காலப் பயிற்சியை வழங்கி வருகின்றது.
இத்திட்டத்தின் கீழ் கடந்த வருடம் யாழ்.மாவட்டத்தில் சுமார் 150 மேசன் தொழிலாளர்களுக்கு 3மாத காலப் பயிற்சி வழங்கப்பட்டு பயிற்சி முடிவில் அவர்களுக்கு 3 மாதங்களுக்குரிய 30ஆயிரம் ரூபா வேதனத்துடன் சீருடைகள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உபகரணங்களும் வழங்கப்பட்டன. இந்நிலையில் பயிற்றப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் நோக்குடன் 2ஆவது தடவையாகவும் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப் பயிற்சியில் பங்குபற்ற விரும்புவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள தேசிய வீடமைப்பு அபவிருத்தி அதிகாரசபை அலுவலகத்தில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 200இற்கும் மேற்பட்டவர்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த வருடத்திரும் பார்க்க இவ்வருடம் பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
|
|