யாழ்ப்பாணத்தில் மாறுபட்ட காலநிலை!

யாழ்ப்பாணத்தில் தற்போது மாறுபட்ட காலநிலை நிலவி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வறட்சியான காலநிலைக்கு மத்தியில் அண்மைக்காலமாக அதிகளவான குளிரான காலநிலை நிலவி வருகிறது.
காலை மற்றும் இரவு நேரங்களில் ஐரோப்பிய நாடுகளை போன்று கடும் குளிரான காலநிலை நிலவுகிறது.
வுழiமாக யாழ்ப்பணத்தில் 35 பாகை செல்சியஸ் வெப்பநிலை நிலவி வருகிறது. எனினும் அண்மைக்காலமாக காலை மற்றும் இரவு நேரங்களில் 22 பாகை செல்சியஸ்; வெப்பநிலை நிலவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டின் பல பாகங்களிலும் மாறுபட்ட காலநிலை நிலவி வருகிறது. கொழும்பு, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் அதிகளவான குளிரான காலநிலை நிலவுகிறது. குறிப்பாக நுவரெலியாவில் உறைபனி கொட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பாடசாலை அதிபர் சடலமாக மீட்பு!
சீனாவிடம் இருந்து புதிய விமானங்களை கொள்வனவு செய்யும் இலங்கை!
நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்ப...
|
|