யாழ்ப்பாணத்தில் அப்துல் கலாம்!
Sunday, March 13th, 2016
பிரபல விஞ்ஞானியும் இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவருமான டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாமின் உருவச்சிலையினை யாழ்.பொதுநூலகத்தில் நிறுவவுள்ளதாக இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் ஆ. நடராஜன் தெரிவித்துள்ளார்
யாழ்.கீறின் கிறாஸ் விருந்தினர் விடுதியில் ஊடகவியலாளர்களுக்கான விருந்துபசார நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்திய அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் அவரின் நினைவாக பாதி உருவச்சிலையினை நிறுவவுள்ளதாக தெரிவித்தார்.
இந்தியாவில் செய்துகொண்டிருக்கும் சிலை மிக விரைவில் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்து யாழ்.பொதுநூலகத்தில் உள்ள இந்திய கோர்னரில் நிறுவவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இவ்விடயம் யாழ் மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குரங்குகளை அடக்காவிட்டால் உணவு தவிர்ப்பே கடைசி வழி: தென்மராட்சி பிரதேச மக்கள் தெரிவிப்பு!
உத்தேச தேர்தல்கள் சட்டமூலத்தின் மூலம் அபராதங்கள் புதுப்பிக்கப்படும் என எதிர்பார்ப்பு!
குறுகிய அரசியல் நோக்கத்துக்காக வரி கொள்கைகளை திருத்தம் செய்தால் நாடு மீண்டும் மிக மோசமான நிலைக்கு மு...
|
|
|
முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகம் - விரைந்து செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மின்...
இலங்கையின் சட்டம் - யாப்புக்கு அப்பால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது - வெளிவிவகார அமைச்ச...
நலன்புரி கொடுப்பனவுகளுக்குத் தகுதியானவர்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கை - 22 இலட்சத்திற்கும் அதிகமான ...


