குரங்குகளை அடக்காவிட்டால் உணவு தவிர்ப்பே கடைசி வழி: தென்மராட்சி பிரதேச மக்கள் தெரிவிப்பு!

Friday, October 21st, 2016

மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும்  கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் உணவு தவிர்ப்புப் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு தென்மராட்சிப் பிரதேச மக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக அல்லாரைக் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். தென்மராட்சியில் பெரும்பாலானோர் விவசாயத்தையே நம்பியுள்ளனர். போரின் பின்னர் இந்தப் பிரதேசத்தில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பயிர்ச் செய்கைகளை அவை நாசப்படுத்துகின்றன. பிரதேச, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் பல தடவைகள் இது குறித்து தெரிவித்தோம். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அல்லாரையில் இயங்கம் விவசாயப் பண்ணையில் அண்மையில் 60 முருங்கை மரங்களை குரங்குகள் நாசம் செய்தன. விவசாயக் கொட்டில்களையும் சேதப்படுத்தின. குடியிருப்பு ஓடுகளும் உடைக்கப்படுகின்றன. தென்மராட்சி பிரதேசத்தின் பழச் செய்கையும் குரங்குகளால் பின்னடவைச் சந்தித்துள்ளது. குரங்குகளால் பல விவசாயக் குடும்பங்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் நிலையும் ஏற்பட்டுள்ளது. கமநல சேவைகள் திணைக்களம் கடந்த வாரம் வீட்டுத்தோட்ட செய்கைக்கு ஆள்களைத் தெரிவு செய்து விதைகளை வழங்கிப் பயிற்சி வழங்கியது. குரங்குகளை கட்டுப்படுத்தாவிட்டால் எமக்கு விதைகள் தேவையில்லை என்று மக்கள் விசனிக்கும் நிலை அங்கு காணப்பட்டது. பிரதேச மக்களின் பிரச்சினையை உணர்ந்து இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் உங்கள் அலவலகத்தின் முன்பாக உணவு தவிர்ப்புப் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை – என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

03-1457009250-monkey-600-jpg

Related posts: