யாழ்ப்பாணத்தில் ‘அஜித்குழு’ !
Wednesday, December 6th, 2017
மீசாலை பகுதியில் வாள்வீச்சு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் காயமடைந்த இரண்டு பேர் (வயது 17 மற்றும் 20) சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டி ஒன்றில் வந்த ஒருவரே இந்த தாக்குதலை நடத்தி இருக்கின்றார். இதேவளை இந்த தாக்குதலை சாவகச்சேரியில் இயங்கும் அஜித்குழு என்ற குழுவே மேற்கொண்டிருப்பதாக சாவகச்சேரி பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன்படி சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சவுக்கு காட்டில் தீ : கடற்படை, மீனவர்களால் கட்டுப்படுத்தப்பட்டது
இராணுவத்தால் கைது செய்யப்பட்ட மகன் அமைச்சருடன் : தகவல் வழங்கக்கோரும் தாய்.!
மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை ரஷ்ய - இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க தீ...
|
|
|


