சவுக்கு காட்டில் தீ : கடற்படை, மீனவர்களால் கட்டுப்படுத்தப்பட்டது

Thursday, April 21st, 2016

சுழிபுரம் பகுதியிலுள்ள உள்ள சவுக்கு காட்டில் நந்று (20) ஏற்பட்ட தீ கடற்படையினர் மற்றும் மீனவர்களின் முயற்சியால் கட்டுப்படுத்தப்பட்டள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தீ அனர்த்தம் காரணமாக, சுமார் 1 கிலோமீற்றர் நீளமான இடத்தில் அமைந்திருந்த சுமார் 500 சவுக்கு மரங்கள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் தீ பரவியமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சவுக்கம் காட்டில் தீ பரவியதை அவதானித்த கடற்றொழிலாளர்கள் கடற்படையினருக்கு அறிவித்துள்ளனர்.

உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற கடற்படையினர் உயரதிகாரிகள், கடற்படையினர் தீயணைப்பு வாகனம் மற்றும் தண்ணீர் பவுஸர்கள் என்பவற்றின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்தச் சவுக்கம் காட்டைப் பாதுகாப்பதற்காகவும் கரையோரத்தைப் பாதுகாப்பற்காகவும் தமது சுழிபுரம் மேற்கு அலைமகள் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் வருடாந்தம் குறிப்பிட்டளவு நிதியை செலவிடுவதாகவும் தெரிவித்த மேற்படி சங்கத் தலைவர் லோ.கமலதாஸ், எரிந்த இடத்தில் மீண்டும் சவுக்கு மரங்களை நாட்டி வளர்ப்பதற்கு தங்களுக்கு உதவி செய்யுமாறு உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன

Related posts: