யாழ்ப்பாணதத்தில் 10 சதவீதம் நெல் அழிவு -யாழ்.மாவட்ட விவசாயக் குழு!

Friday, January 6th, 2017

காலநிலை மாற்றத்தால் யாழ்.மாவட்டத்தில் 10 சதவீதம் நெல் அழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்ப்ட விவசாயிகளுக்கு காப்புறுதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று யாழ்.மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் மாவட்ட விவசாயகக் குழுக்கூட்டம் நேற்று வியாழக்கிழமை மாவட்ட செயலர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்விலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

அந்தக் கூட்டத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

காலநிலை மாற்றத்தால் பெரும்போக நெற்செய்கையில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எதிர்வரும் மார்ச் மாதம் வரையில் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் அடுத்து ஒரு மழை வராத பட்சத்தில் நெல் அழிவின் தாக்கம் அதிகரிப்ப வாய்ப்புள்ளது. கமநல சேவைகள் நிலையங்கள் ஊடாக உரமானியம் வழங்கப்படும் விவசாயிகள் விவரங்கள் ரீதியாக நெல் அழிவு எவ்வளவு ஏற்பட்டுள்ளது. என்பதன் விவரங்கள் எடுத்து விவசாய காப்புறுதி கூட்டுத்தாபனத்தினால் காப்புறதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது.

3_2638952g

Related posts: