யாழில் வரட்சியால் 1980 ஹெக்டேயர் பயிர்ச் செய்கை அழிவு!
 Tuesday, May 15th, 2018
        
                    Tuesday, May 15th, 2018
            யாழ்ப்பாணத்தில் வரட்சியின் காரணமாக வெங்காயம் உட்பட்ட 1980 ஹெக்டேயர் பயிர்ச் செய்கை பரப்பு முற்றாக அழிவடைந்துள்ளது.
உரும்பிராய் இளவாழை மற்றும் மாதகல் பகுதிகளில் வெங்காய பயிர்ச் செய்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
தமது பயிர்ச்செய்கைகள் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால் தம்மால் பெறப்பட்ட வங்கிக்கடன்களை செலுத்துவதற்கு நிவாரணங்கள் பெற்றுத்தருமாறு குறித்த பகுதிகளைச் சேர்ந்தவிவசாய அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
கடந்த வருடம் குறித்த விளை நிலங்களில் உருளைக்கிழங்கு பயிர்ச் செய்கையில் ஈடுபட்டதாகவும் உரிய காலத்தில் விதை உருளைக்கிழங்குகள் கிடைக்காமை காரணமாக இந்தவருடம் மாற்றுபயிர்ச் செய்கையாக வெங்காயத்தை பயிரிட்டதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
வெங்காயம், உருளைக் கிழங்குக்கு இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டும் - யாழ்ப்பாண மாவட்டச் செயலரிடம் விவ...
யாழில் முதன்முறையாக நவீன இலத்திரனியல் மார்பு எக்ஸ்ரே இயந்திரம்!
கணக்கு உரிமையாளர்களுக்கு அறிவிக்காமல் பணம் அறவிடும் வங்கிகளுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்ப...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        