யாழில் காவலாளியை மிரட்டி கொள்ளை!
Wednesday, June 6th, 2018
சுன்னாகம் பகுதியில் காவலாளி ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
சுன்னாகம் கால்நடை மருத்துவமனையில் இன்று அதிகாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மருத்துவமனையில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த காவலாளி ஒருவரிடம் நால்வர் கொண்ட குழு கத்தியை காட்டி மிரட்டி, அவரிடமிருந்த பணம் மற்றும் அணிந்திருந்த சங்கிலியையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், சுன்னாகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Related posts:
நாட்டில் அதிகரிக்கிறது கொரோனா தொற்றாளர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை பி.சி.ஆர் பரிசோதனையில் மூவருக்கு ...
ஆடை கைத்தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு விசேட நிகழ்ச்சித்திட்டம் - ஜனாதிபதி!
அங்கீகாரம் வழங்கப்படும் தனியார் வைத்தியசாலைகளிலும் பி சி ஆர் பரிசோதனை - சுகாதார வழிகாட்டல்கள் சுகாதா...
|
|
|


