நாட்டில் அதிகரிக்கிறது கொரோனா தொற்றாளர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை பி.சி.ஆர் பரிசோதனையில் மூவருக்கு தொற்றுறுதி!

Friday, October 16th, 2020

வெளிநாட்டில் இருந்து வருகைதந்த 6 பேர் உட்பட நாட்டில் நேற்றையதினம் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் மினுவாங்கொடை கொத்தணியில் 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 22 பேருக்கும், அவர்களுடன் தொடர்பினை பேணிய 46 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, மினுவாங்கொடை கொத்தணியில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 1, 789 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

முல்லைத்தீவில் தனிமைப்படுத்தபட்டிருந்த கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த மூவருக்கே இவ்வாறு உறுதி செய்யப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும் மினுவாங்கொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்களுக்கே கொரோனா தொற்று உறுதியாவதாக சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் இலங்கையில் சமூக தொற்றாக மாறவில்லை என்பது விஞ்ஞான ரீதியாக உறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பி.சி.ஆர் பரிசோதனைகளின் பெறுபேறுகளை 24 மணி நேரத்திற்குள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: