அங்கீகாரம் வழங்கப்படும் தனியார் வைத்தியசாலைகளிலும் பி சி ஆர் பரிசோதனை – சுகாதார வழிகாட்டல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் வெளியீடு!

Tuesday, May 25th, 2021

சுகாதார அமைச்சினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள தனியார் ஆய்வுகூடங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் பீ.சி.ஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்வது தொடர்பில் சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தனவினால் குறித்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி பரிசோதனைகள் விசேட வைத்திய அதிகாரி அல்லது கடமையில் உள்ள வைத்திய அதிகாரியின் பரிந்துரைக்கு அமையவே முன்னெடுக்கப்பட வேண்டும். பரிசோதனைக்கான மாதிரி பெறப்பட்டதும் உரிய நிறுவனத்தினால் முடிவுகள் வழங்கப்படும்வரை உரிய நோயாளர் வீடு அல்லது குறித்த வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்படுவதற்கான ஆலோசனை வழங்கப்பட வேண்டும்.

அதுதொடர்பில் ஆய்வுகூடம் அல்லது வைத்தியசாலையின் அதிகாரிகளினால் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு, பொறுப்புக்கூற வேண்டும். நபர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டு உறுதிப்படுத்தப்பட்டால் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வு பிரிவு, உரிய சுகாரதார வைத்திய அதிகாரி மற்றும் உரிய தொற்றாளருக்கும் அது தொடர்பில் ஆய்வுகூடம் மற்றும் வைத்தியசாலையினால் அறிவிக்கவேண்டிய பொறுப்பு காணப்படுகிறது.

பீ.சி.ஆர், மற்றும் அன்டிஜன் பரிசோதனைக்காக மாதிரிகள் பெறப்படும் இடம் பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும் என்பதோடு, வாகனங்களில் பயணிக்கும் போதும் நடந்துசெல்லும் போதும் மாதிரிகளை பெற முடியாதென வலியுறுத்தப்பட்டுள்ளது. அதுதொடர்பில் உரிய நடைமுறைகளை பேணுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீ...
அமைச்சுகளின் செலவீனங்களை குறைக்க நடவடிக்கை - அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் நிதி அமைச்சு அ...
பொருளாதார நெருக்கடியில் இருந்து நிச்சயம் மீண்டு வரும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை!