யாசகர்களுக்கு இனி சிறை – பொலிசார் எச்சரிக்கை!
Wednesday, October 19th, 2016
கொழும்பின் பல பிரதேசங்களில் வீதி சமிஞ்சை விளக்குகள் உள்ள பகுதிகளில் யாசகம் செய்பவர்களை கைது செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பதாக சாரதிகளால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸாரால் மேற்குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சாரதிகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களை தடுப்பதற்கும், வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவதும் இது சிறந்த நடவடிக்கை என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறு கைது செய்யப்படுபவர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக யாசகர்களை பொலிஸார் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:
இலங்கை பணியாளர்களுக்கு எச்சரிக்கை!
மூன்று கொள்ளையருக்கு 3 வருட கடூழியச் சிறை!
தனியார் வகுப்புக்களை ஆரம்பிக்கும் திகதியில் மீண்டும் மாற்றம் – வரையறுக்கப்பட்ட மாணவருடன் சமூக இடைவெள...
|
|
|


