மோட்டார்ச் சைக்கிளில் வேகமாக வந்தவர்கள் துவிச்சக்கர வண்டியில் சென்ற யுவதியை மோதிவிட்டுத் தப்பியோட்டம்!
Sunday, March 27th, 2016
மோட்டார்ச் சைக்கிளில் வேகமாக வந்த இனந் தெரியாதோர் துவிச்சக்கர வண்டியில் வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்த இளம் யுவதியை மோதி வீட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலயத்திற்கு அருகில் நேற்று (26) இரவு7 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்துச் சம்பவத்தில் 25 வயதான யுவதி காலில் காயங்களுக்கு உள்ளானதுடன் அவர் செலுத்தி வந்த துவிச்சக்கர வண்டி கடுமையான சேதங்களுக்கு உள்ளானது.
சம்பவம் நடைபெற்ற பின்னர் அப் பகுதியில் பொதுமக்கள் ஒன்று கூடிய போதும் சம்பவத்துக்குக் காரணமான மோட்டார்ச் சைக்கிள் செலுத்துனர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. விபத்துச் சம்பவத்தையடுத்துக் குறித்த யுவதி அழுதவாறு நின்ற நிலையில் பொதுமக்கள் அவரை வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கனடாவுக்கு ஆள்களை கடத்த திட்டமிட்ட பிரதான சூத்திரதாரி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் - பொலிஸ் ஊடகப் பேச்சா...
யாழ்ப்பாணத்தில் கைத்தொழில் கண்காட்சி - அமைச்சர் ரமேஷ்பத்திரன தலைமையில் நாளைமுதல் எதிர்வரும் 3 ஆம் தி...
ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் - சர்வதேச வர்த்தக சபையின் தலைவர் மரியா பெர்ணான்டா கர்சா இலங்கை வருகை...
|
|
|


