தி பினாஸ் பி.எல்.சி நிறுவனத்தின் அனுமதி பத்திரம் இரத்து – இலங்கை மத்திய வங்கி!

Thursday, October 24th, 2019


தி பினாஸ் பி.எல்.சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி பத்திரத்தை இரத்துச் செய்ய இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

நிதி வணிகச் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையின்படி வைப்பாளர்கள் மற்றும் பிற கடன் வழங்குநர்களின் நலன்களை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நேற்றைய நாள் முதல் அமுலுக்கு வரும் வகையில் தி பினாஸ் பி.எல்.சி நிறுவனத்தின் அனுமதி பத்திரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த நிறுவனத்தை மீள இயங்க செய்ய வேண்டுமாயின் உரிய திட்டம் ஒன்றின் மூலம் நம்பிக்கைமிகு முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய வங்கியின் விதிகளுக்கு அமைய வைப்பாளர்களுக்கு வைப்பு தொகைக்கான வட்டி தொடர்ந்தும் செலுத்தப்படும் என்பதோடு நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அனைத்து வகையான கடன்களையும் உரிய வகையில் செலுத்த வேண்டும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

தி பினாஸ் பி.எல்.சி நிறுவனத்தில் காணப்படும் பலவீனமான நிதி செயற்திறனற்ற தன்மையை கருத்தில் கொண்டு மத்திய வங்கி கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி முதல் புதிய வைப்புகளை ஏற்றுக்கொள்வது, வைப்புத் தொகையை மீள செலுத்தல், கடன்கள் மற்றும் முற்பணம் ஆகியவற்றை கடந்த பெப்ரவரி மாதம் 15 திகதி முதல் இடைநிறுத்த நடவடிக்கை எடுத்திருந்தது

Related posts: