மே மாதத்தில் கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் இணைப்பு!

கல்வியியல் கல்லூரிகளுக்கு மே மாதத்தில் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நேர்முகப் பரீட்சைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு 4,745 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர் என்று ஆசிரியர் கல்விதலைமை ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார தெரிவித்துள்ளார்.
மூன்றாம் வருடத்திற்கான கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு தங்குமிட வசதிகளைக் கொண்ட பயிற்சிகள் இன்று முதல் பாடசாலைகளுடன் ஒன்றிணைக்கப்படுமென்றும்அவர் குறிப்பிட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய மாணவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். ஆரம்ப மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்காக இம்முறை கூடுதலானமாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வேட்பாளர்களின் சமூக வலைத்தளங்களை கண்காணிபப்பு!
பயிலுநராக அரசாங்க சேவையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு 2022 ஜனவரி மாதம்முதல் நிரந்தர நியம...
நாளை தீபத் திருநாள் – யாழ்ப்பாணத்தில் சிட்டி வியாபாரம் மும்முரம்!
|
|