வேட்பாளர்களின் சமூக வலைத்தளங்களை கண்காணிபப்பு!

Monday, March 9th, 2020

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சமூக வலைத்தள கணக்குகளை கண்காணிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தீர்மானித்துள்ளன.

வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இதனை ஆரம்பிக்க உள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஆத்திரத்தை தூண்டும் கருத்துக்கள் மற்றும் பொய்யான செய்திகள் பிரசாரம் செய்யப்படுவதை தடுக்கும் நோக்கில் இதனை செயற்படுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு மற்றும் பேஸ்புக் நிறுவனத்தின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

முறைப்பாடு செய்யப்படும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் பதிவுகள் நீக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts: