மேலும் 4 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரச சேவையில் வேலை வாய்ப்பு!

அரச துறைகளில் மேலும் 4 ஆயிரம் பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நேர்முகப் பரீட்சைகளுக்கு அழைக்கப்பட்டு கூடிய பெறுபேறுகளைப் பெறும் பட்டதாரிகள் 4 ஆயிரம் பேர் இதன்படி அரச தொழில் துறைகளில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
அரச அபிவிருத்தி அதிகாரிகளாக இவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
Related posts:
யாழ். இந்திய துணைத்தூதரகத்தில் கதக் நடனம் புதிய பிரிவுக்கு விண்ணப்பங்கள் கோரல்
உற்பத்தி காப்புறுதி இலவசம் - விவசாய காப்புறுதிச் சபையின் தலைவர்!
சேந்தாங்குளம் கடலில் ஆணின் சடலம் கண்டுபிடிப்பு!
|
|