உற்பத்தி காப்புறுதி இலவசம் – விவசாய காப்புறுதிச் சபையின் தலைவர்!
Monday, March 5th, 2018
சிறுபோகத்தில் இருந்து, விவசாயிகளுக்கு உற்பத்தி காப்புறுதி இலவசமாக பெற்றுக் கொடுக்கப்படும் என விவசாய காப்புறுதிச் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளைப் பாதுகாத்து, அவர்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுகின்றன. நாட்டில் விவசாயச் சங்கங்களை உள்ளடக்கிய வகையில், 2500 பேரைக் கொண்ட விவசாயப் பிரதிநிதி வலைப்பின்னல் தற்போது அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், காப்புறுதி நடைமுறை குறித்து, விவசாயிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தற்போது வழங்கப்பட்டுள்ள உற்பத்திகளுக்கு மேலதிகமாக, பாசிப்பயறு, எள்ளு, கௌபி உள்ளிட்ட, ஏனைய உற்பத்திகளுக்கும் காப்புறுதித் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Related posts:
மூடப்படும் மிஹின்லங்கா?
நீதிபதிகளை விமர்சிக்க எவருக்கும் கிடையாது - நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச காட்டம்!
இணையம் மூலம் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அதிக முறைப்பாடு – பொதுப் ப...
|
|
|


