மென்பானங்களது காலாவதித் திகதியை வர்த்தகர்களே உறுதி செய்யவேண்டும் – பாவனையாளர் அதிகாரசபை அறிவுறுத்து!

Friday, November 25th, 2016

மென்பானங்களை விற்கும் கடைக்காரர்கள் அதன் காலாவதித் திகதியை நன்கு உறுதிப்படுத்திய பின்னரே இறக்குமதியாளர்களிடம் இருந்துப் பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லையேல் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாவனையாளர் அதிகார சபையின் யாழ்.மாவட்டப் பொறுப்பதிகாரி த.வசந்தசேகரன் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது:

மென்பானங்களை இறக்குமதி செய்யும் விநியோகஸ்தர்கள் அவற்றைத் தாங்களாகவே கடைகளுக்குள் சென்று குளிரூட்டிகள் என்பவற்ற்pல் அடுக்கியும் விடுகின்றனர். கடைக்காரர்கள் காலாவதித் திகதியை பார்வையிடத் தவறுகின்றனர். கடைக்காரர்களும் தெரியாமலே திகதி முடிவடைந்த மென்பானங்களை பொதுமக்களுக்கு விற்கவேண்டிய சூழ்நிலை உள்ளது. பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் இப்படியான உணவுப்பொருட்களை எந்த விதமான முழுத் தகவல்களும் இன்றி எந்தக் கடைக்காரர்களும் கொள்வனவு செய்வதை தவிர்க்க வேண்டும். இனிமேலும் முழுதகவல்கள் இன்றிக் காணப்படும் உணவுவகைகளை வைத்திருக்கும் கடைககாரர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – என்றார்

2-5

Related posts:

மக்களுக்கான சேவைகளை முன்னெடுப்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம் - யாழ்.மாவட்ட நிர்வாகச் செயலாளர் ஜெ...
யாழில் முடக்கப்பட்டுள்ள பகுதிகள் தொடர்பில் இரு வாரங்களின் பின்னரே முடிவெடுக்கப்படும் – மாகாண சுகாதார...
ஆசிரியர் இடமாற்ற சபை கலைப்பு: பிரச்சினைக்கு நாளை தீர்வு – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்ப...