மக்களுக்கான சேவைகளை முன்னெடுப்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம் – யாழ்.மாவட்ட நிர்வாகச் செயலாளர் ஜெகன்

Monday, April 10th, 2017

தீர்க்க தரிசனம் மிக்க எமது செயலாளர் நாயகத்தின் சிந்தனைக்கு அமைவாக மக்களுக்கான சேவைகளை எந்த இடர்பாடுகள் தடைகளுக்கு மத்தியிலும் முன்னெடுப்பதற்கு நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம் என கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாகச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கா.வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) தெரிவித்தார்.

அனலைதீவிற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்த மாவட்ட நிர்வாகச் செயலாளர் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மக்களை சந்தித்து கலந்துரையாடும் போது இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் அனலைதீவை பொருத்தவரையில் இதன் அபிவிருத்தியை கருத்தில் கொண்டதாக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலுக்கு அமைவாக பல்வேறு அபிவிருத்திகளை நாம் முன்னெடுத்திருந்தோம்.

குறிப்பாக வீதிப்புனரமைப்பு உள்ளிட்ட அபிவிருத்திகளையும் நாம் முன்னெடுத்துள்ளோம்.
இவ்வருட இறுதிக்குள் உள்ளுராட்சி தேர்தல் நடைபெறுவதாக அறியப்படும் நிலையில் மக்கள் மக்களுக்காய் உழைப்பவர்களையே இனம் கண்டு தெரிவு செய்வதனூடாக இவற்றை செயற்படுத்த முடியும் அதை விடுத்து வெற்றுக் கோஷங்களும் உணர்ச்சி பேச்சுக்களும் நடைமுறைப்படுத்த முடியாத பொய் வாக்குறுதிகளையும் நம்பியதால் இன்று மக்கள் வீதிகளில் இறங்கி போராடுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான கூட்டமைப்பினரின் வெற்றுக் கோஷங்களை மக்கள் இனியும் நம்பத் தயாராக இல்லை என்றும் மாவட்ட நிர்வாகச் செயலாளர் வி.கே.ஜெகன் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே குடிநீர், போக்குவரத்து, வீதிப்புனரமைப்பு உள்ளிட்ட தமது தேவைப்படுகளை கருத்தில் கொண்டு அவற்றிற்கான தீர்வுகளை பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். கடந்தகாலங்களில் அனலைதீவிற்கு மின்சார வசதியை ஏற்படுத்தி தந்த டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு தாம் எப்போதும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக தமது பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் கண்டு வருவதாகவும் அம் மக்கள் சுட்டிக்காட்டினர்.

செயலாளர் நாயகம் டக்ளஸ் தோவானந்தா மக்களின் பிரச்சினைகளை தொலைபேசி வாயிலாக கேட்டறிந்து கொண்டு அவற்றிற்கான தீர்வுகளை பெற்றுத் தருவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதாக கூறினார்.

இச் சந்திப்பின் போது ஊர்காவற்துறை பிரதேச நிர்வாக செயலாளர் மருதயினார் காந்தன் வட்டாரச் செயலாளர் குகா உடனிருந்தனர்.

Related posts: