மூளைக் காய்ச்சல் – யாழ்ப்பாணத்தில் கிராம சேவகர் ஒருவர் பலி!
Wednesday, November 15th, 2023
மூளைக் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணத்தில் கிராம சேவகர் ஒருவர் நேற்றையதினம் (14) உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது
புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த குமாரன் குகதாசன் (48) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த கிராம சேவகர் தீபாவளி தினத்தன்று மயங்கி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர், அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்றையதினம் உயிரிழந்தார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
மூளைக் காய்ச்சலினாலேயே மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அனைத்து மாவட்ட செயலகங்களிலும் குடிவரவு மற்றும் குடியகல்வு உப அலுவலகங்கள் உடனடியாக ஸ்தாபிக்க நடவடிக்க...
இந்தியாவுடன் மிகமோசமாக விளையாடிய இலங்கை அணி 302 ஓட்டங்களால் படுதோல்வி – அணியின் நிலை குறித்து கண்ணீ...
ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்படவிருந்த 1,989 மில்லியன் ரூபா மாத இறுதிக்குள் வழங்கப்படும் - அமைச்சர் ...
|
|
|


