இந்தியாவுடன் மிகமோசமாக விளையாடிய இலங்கை அணி 302 ஓட்டங்களால் படுதோல்வி – அணியின் நிலை குறித்து கண்ணீர் விட்ட அழுத மூத்த வீரர் அஞ்சலோ மத்யூஸ்!

Friday, November 3rd, 2023

2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண தொடரின் 33 ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் நேற்றையதினம் மோதின. இதில் மிகமோசமாக விளையாடிய இலங்கை அணி படுதோல்வியை சந்தித்தது.

இலங்கை கிரிகெட் அணியின் தொடர் தோல்விகளானது பெரும் பேசு பொருளாக இலங்கை மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகின்றது.. அந்தளவுக்கு தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத ரசிகர்கள் இலங்கை கிரிகெட் அணியை விமர்சித்து வருகின்றனர்.

இதனிடையே இலங்கை கிரிக்கெட் அணியின் தொடர் தோல்வியின் காரணமாக தற்போது அணியின் பயிற்றுவிப்பாளர் பெரும் அசௌகரி நிலையில் இருப்பதாக தெரியவருகின்றது

தெரிவுக்குழு மற்றும் பயிற்றுவிப்பாளர்களிடம் வினவ தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் எந்த நிலையின் கீழ் இலங்கை அணியின் தெரிவு இடம்பெற்றது என்பது குறித்து வினவ எதிர்பார்த்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டி அதிகாரி தெரிவித்துள்ளார்

அணியிலிருந்து தனஞ்ஜய டி சில்வா நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக துஷான் ஹேமந்த தெரிவு செய்யப்பட்டமை தற்போது தலைதூக்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கை கிரிக்கெட் அணி நேற்றைய போட்டியில் மிக மோசமாக விளையாடியமைக்கான காரணம் தொடர்பிலும் வினவ ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை எதிர்பார்த்துள்ளதாக அறிய முடிகின்றது.

உலகக்கோப்பைத் தொடரில் இலங்கை அணி 7 போட்டிகளை எதிர்கொண்டு, நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளில் மாத்திரமே இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இந்தியா ஆகிய ஐந்து அணிகளும் எதிராக இலங்கை அணி தோல்வியை தழுவியிருக்கிறது. இந்நிலையில், இலங்கை அணிக்கு இன்னும் 2 போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

பங்களதேஷ் மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகளுடன் இலங்கை அணி மோதவுள்ளது. நேற்று வியாழனன்று (நவம்பர் 2) இந்திய அணியுடனான படுதோல்விக்குப்பின் இலங்கை அணி அரையிறுதிப் போட்டிக்குச் செல்வது மிகப்பெரிய கேள்விக்குறியாகியிருக்கிறது.

இதேவேளை இலங்கை கிரிகெட் அணியை பொருத்தவரையில் இளம் வீரர்களை வைத்தே அனைத்து போட்டிகளிலும் பங்குபற்ற வேண்டிய நிலை இருக்கின்றது.

இது தொடர்பில் இலங்கையின் விளையாட்டு விமர்சகரும், விளையாட்டு ஊடகவியலாளருமான அப்துல் ரகுமான் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தையும் வெளியிட்டிருந்தார்.

அதில், இலங்கை கிரிகெட் அணியானது மறைமுகமாக அரசியல் தலையீட்டை கொண்டதாக அமைந்துள்ளதாக அனைவரையும் விமர்சிக்கின்றனர்.

அதை தாண்டி இலங்கை அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாமையே, இலங்கை அணி தோல்விகளை சந்திப்பதற்கு பிரதான காரணம் என விளையாட்டு ஊடகவியலாளர் அப்துல் ரகுமான் குறிப்பிடுகின்றார்.

மேலும், எஞ்சலோ மேத்யூஸ் இலங்கை கிரிக்கெட் அணியில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு வீரர். அவரை அண்மை காலமாக போட்டிகள் எதிலும் சேர்த்துக்கொள்ளவில்லை. ஆனால், அண்மைய போட்டியில் திறமையாகச் செயல்பட்டிருந்தார்.

அன்று இலங்கை அணிக்கு வெற்றி கிடைத்தது. இவ்வாறான குறைகளை இலங்கை கிரிக்கெட் நிவர்த்தி செய்யாத வரையில், இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் சந்தேகத்திற்குரியதுதான்,” என அவர் கூறினார்.

மேலும், இலங்கை கிரிகெட்டில் எவ்வளவு அரசியல் கலந்திருக்கின்றது என்பதும் தொடர்பிலும் அவர் தெளிவான எடுத்துரைத்திருந்தார்.

இதேநேரம் இதற்கு முன்னைய கிரிகெட் அணியாது, மிகவும் திறமையதனவர்களாக செயற்பட்டனர். தற்போதைய அணியினரிடம் ஒற்றுமை இல்லை.

அணி முகாமைத்துவம் இன்மை, தலைமைத்துவம் இல்லை, நேர்த்தியான டீம் வேர்க் இல்லை என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஒருபக்கம் இதற்கு இலங்கை அரசியல் தலையீடே காரணம் எனவும் கருத்துக்களை பரப்பி வருகின்றனர். இதனை அடிப்படையாக வைத்து பார்த்தால், இலங்கை அணியை எவ்வளவு தூரம் மக்கள் நேசிக்கின்றார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது.

இப்படியே போகுமனால், இலங்கை அணியும் தற்போது பா்கிஸ்தான் அணி இருக்கும் நிலையை அடையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இதனிடையே மைதானத்தில் இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய பிறகு, எஞ்சலோ மேத்யூஸ் விராட் கோலியை அழுதுகொண்டே கட்டிப்பிடித்தார்.

மேலும், அவர் அழுதுகொண்டே தொடரை பார்த்துக்கொண்டிருந்தமையானது பார்ப்பவர்கள் மனதில் சஞ்சலதை ஏற்படுத்தியிருந்தது.

ஒரு மூத்த வீரராக இலங்கை கிரிகெட் அணிமீது அவர் வைத்திருக்கும் மரியாதையும் அன்பும் இதில் வெளிப்படுவதாகவும் கிரிகெட் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலை இப்படியே தொடருமானால் இலங்கை கிரிகெட் அணி பாரிய பின்னடைவை சந்திக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

தற்போதை அணியின் போக்கு, முந்தைய அணி வீரர்களின் சாதனை கூட பின்னுக்கு தள்ளிவிடும் நிலையே தற்போது ஏற்பட்டுள்ளதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: