முல்லைத்தீவில் இடைவிலகும் மாணவர்கள் தொகை அதிகரிப்பு!

Friday, January 6th, 2017

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு செல்லாத மற்றும் பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய மாணவர்களின் தொகை அதிகளவில் காணப்படுவதாக பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர். ஷ

முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின் தங்கிய கிராமங்களில் போக்குவரத்து வசதிகள் இன்மை, குடும்பங்களிடையே  காணப்படும் பொருளாதார நெருக்கடிகள் என்பவற்றின் காரணமாகவே மாணவர்கள் பாடசாலைக்கு செல்லாமல் இடைவிலகும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மாங்குளம், திருமுறிகண்டி, இந்துபுரம், வசந்தநகர், ஒட்டுசுட்டான்,வித்தியாபுரம் ஆகிய பகுதிகளிலும் துணுக்காய், ஜயன்குளம், கோட்டைக் கட்டிய குளம் ஆகிய பகுதிகளிலுமே இவ்வாறு பாடசாலைக்கு செல்லாத மாணவர்கள் அதிகமாகக் காணப்படுகின்றனர்.

பின் தங்கிய கிராமங்களிலுள்ள ஆரம்ப பாடசாலைகளில் கல்வியைத் தொடரும் மாணவர்கள் உயர்கல்வியைப் பெற வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது. எனினும் அதற்கான போக்குவரத்து வசதிகள் இன்மையே அதிகளவான இடைவிலகல்களுக்கு காரணமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

291

Related posts: