நாட்டில் மழை படிப்படியாக குறையும்!

Tuesday, January 31st, 2017

தற்போது ஏற்பட்டுள்ள மழைக் காலநிலை, இன்று (31) முதல் படிப்படியாக குறைவடையலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், எதிர்வரும் நாட்களில் நாட்டின் வட அரைப் பகுதியில், காலை மற்றும் மாலை வேளைகளில் குளிரான நிலை காணப்படலாம் எனவும், திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சப்ரகமுவ, மத்திய, மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பிரதேசங்களில், பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படாலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கிழக்கு மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டம் ஆகியவற்றின் கடற்கரை பிரதேசத்தில் சிறியளவிலான மழை பொழியலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் பிரதேசங்களில், தற்காலிகமாக வேகமான காற்று உண்டாகலாம் எனவும், இடி, மின்னல் தாக்கங்களிலினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாக்குமாறும், வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

rain-1080p-wallpaper_113126502-415x260

Related posts:


டொலர்களில் சுங்கத் தீர்வையை செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு மத்திய வங்கி, அரசாங...
எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் போதைப்பொருள் வர்த்தகமும் பாதாள உலக செயற்பாடுகளும் ஒடுக்கப்படும் - பொது...
நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைய மத்திய வங்கியே பிரதான காரணமாகும் - நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்...