முன்னாள் நீதியரசர் சரத் ஆப்றூப் நிரபராதி என நீதிமன்று அறிவிப்பு!
Wednesday, September 14th, 2016
மறைந்த முன்னாள் நீதியரசர் சரத் ஆப்றூவுக்கு எதிரான வழக்கினை முடிவுக்குக் கொண்டு வருவதாக கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்தது.
தனது வீட்டில் பணியாற்றிய ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக அப்றூ மீது குற்றம்சுமத்தப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சரத் ஆப்றூ அண்மையில் தனது வீட்டு மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.
இதன்படி குறித்த வழக்கு விசாரணைகள் இன்று இடம்பெற்ற வேளை, பிரதிவாதி உயிரிழந்துள்ள நிலையில் வழக்கை நிறைவு செய்து கொள்ளுமாறு, மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
இதற்கமைய வழக்கு விசாரணைகளை முடிவுறுத்துவதாக, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன தெரிவித்தார். மேலும், அரசியலமைப்பின் பிரகாரம், நீதிமன்றத்தில் ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதியாவார் என குறிப்பிட்ட நீதாவான், இதன்படி ஆப்றூவும் நிரபராதிதான் எனவும் சுட்டிக்காட்டினார்.

Related posts:
தமிழ் மக்கள் நல்லிணக்கம் பற்றி எதுவும் அறியாதவர்களாக இருக்கின்றார்கள் : பேராசிரியர் டி.எஸ்.ஐ. களுபோ...
வியாபார முகாமைத்துவப் பட்டப் படிப்புக்கான தெரிவுப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு நேர்முகப் பரீட...
ஜனாதிபதி விசேட செயலணி தனது பணிகளை 24 மணி நேரமும் முன்னெடுப்பு!
|
|
|


