முச்சக்கர வண்டி தொடர்பில் பொலிஸாருக்கு  வழங்கப்பட்ட அதிகாரம்?

Wednesday, October 24th, 2018

முச்சக்கரவண்டிகளில் மீற்றர் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த விடயத்தை பின்பற்றாத முச்சக்கரவண்டிகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

இந்த விடயத்தை வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்குள் முச்சக்கரவண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மீற்றர்களின் தரம் தொடர்பிலான அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த அறிக்கையை ஆராய்ந்த பின், முச்சக்கரவண்டிகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் அதிகாரத்தை பொலிஸாருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:


எமது மக்களின் பல மில்லியன் ரூபா பணத்தினைச் சுருட்டிக் கொண்டு செல்வதை அனுமதிக்க முடியாது: வடமாகாண சபை...
மரக்கன்று நடும் நிகழ்வு: பிரதமரினால் சுற்றாடல் அமைச்சருக்கு வெண்சந்தனக் கன்று வழங்கி வைப்பு!
வடதிசை நோக்கிய இயக்கம் - ஏப்ரல் 15ஆம் திகதிவரை இலங்கையின் அகலக் கோடுகளுக்கு நேராக உச்சம் கொடுக்கும்...