முச்சக்கர வண்டி தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட அதிகாரம்?

முச்சக்கரவண்டிகளில் மீற்றர் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த விடயத்தை பின்பற்றாத முச்சக்கரவண்டிகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இந்த விடயத்தை வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்குள் முச்சக்கரவண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மீற்றர்களின் தரம் தொடர்பிலான அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த அறிக்கையை ஆராய்ந்த பின், முச்சக்கரவண்டிகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் அதிகாரத்தை பொலிஸாருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
110 அடி பள்ளத்தில் லொறி வீழ்ந்து விபத்து - இருவர் வைத்தியசாலையில்.
கற்கைநெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்!
உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தாமதம் - நாடாளுமன்றில் இன்றும் இடம்பெறாத போன கொழும்பு துறைமுக நகர விவாதம்!
|
|
இலங்கை - ஐக்கிய அரபு இராச்சியம் இடையே உத்தேசிக்கப்பட்ட முதலீட்டு ஊக்குவிப்பு ஒப்பந்தத்தை, விரைவில் இ...
மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இது உரிய நேரிமில்லை - உற்பத்தி செலவுகளை குறைப்பதே சிறந்தது என அமைச்சர...
வெளிநாடுகளுக்குச் சென்ற 30 விசேட வைத்தியர்கள் கறுப்புப் பட்டியலில் - கோப் குழுக் கூட்டத்தில் தெரிவிப...