முச்சக்கர வண்டி சாரதியின் உதவியால் கொலையாளியை கைது !

Wednesday, August 31st, 2016

பியகம பிரதேசத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிப்புரிந்த ஊழியரை கத்தரி கோலால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தொழிற்சாலையின் பணி மேற்பார்வையாளரான இந்த சந்தேக நபரை தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதுடன் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர், அவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

தலவாக்கலையை சேர்ந்த 28 வயதான தயாளன் ரவி என்ற இளைஞனை சந்தேக நபர் கொலை செய்துள்ளார்.

சம்பவத்தின் பின்னர், முச்சக்கர வண்டியில் ஏறிய சந்தேக நபர், அந்த முச்சக்கர வண்டியின் வேகம் குறைவாக இருந்ததால், வேறு ஒரு முச்சக்கர வண்டியில் ஏறியுள்ளார்.

முதலில் ஏறிச் சென்ற முச்சக்கர வண்டியின் சாரதி பியகம பண்டாரவத்தை பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தரை தனது வண்டியில் ஏற்றிக்கொண்டு, முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்ற சந்தேக நபரை கைது செய்ய உதவியுள்ளார்.

Related posts: