வர்த்தக நிலையங்களுக்கு எதிராக பெப்ரவரி மாதம் மட்டும் 93 வழக்குகள் தாக்கல்!

Monday, April 10th, 2017

இந்த ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் யாழ்ப்பாண மாவட்ட வர்த்தக நிலையங்களுக்கு எதிராக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பாவனையாளர் அதிகார சபையின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் வசந்தசேகரன் தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்ததாவது.

கலாவதியான பொருள்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் 73 வழக்குகளும், உற்பத்தி திகதி, விலை பொறிக்கப்படாமை தொடர்பில் 8 வழக்குகளும் கட்டுப்பாட்டு விலைக்கு மேல் பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் 12 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. அவற்றுக்கு நீதிமன்றங்களினால் 3இலட்சத்து 13ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது, யாழ். நீதவான் மன்றால் ஒரு லட்சத்து 69ஆயிரம் ரூபாவும், மல்லாகம் நீதிவான் மன்றால் 72,500ரூபாவும் சாவகச்சேரி நீதிமன்றால் 29ஆயிரம் ரூபாவும் பருத்தித்துறை நீதிவான் மன்றால் 27,500ரூபாவும் தண்டம் விதிக்கப்பட்டது. என்றார்.

Related posts: