உண்மையை ஆராயாமல் கருத்துக்களை வெளியிடுவது எதிர்கட்சி தலைவர் பதவி வகிக்கும் ஒருவருக்கு பொறுத்தமானதல்லை – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன சுட்டிக்காட்டு!

Saturday, August 21st, 2021

மருந்து தட்டுப்பாடு குறித்து எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ விடுத்த அறிக்கையை ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன நிராகரித்துள்ளார்.

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து 2 தேசிய நாளிதழ்களில் கடந்த 19 ஆம் திகதி அறிக்கையிடப்பட்டிருந்த போதிலும் அதனை அறிக்கையிட்ட ஊடகவியலாளர் காரணங்களை ஆராயாமல் 40 வகையான மருந்துகளின் பட்டியலை வெளியிட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தமது கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட விடயத்தினை ஆராயாமல் மீண்டும் வெளியிடுவது எதிர்கட்சி தலைவர் பதவி வகிக்கும் ஒருவருக்கு பொறுத்தமானதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை,  தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகாரசபை சட்டத்திற்கு அமைய மருந்து வகைகள் மற்றும் வைத்திய உபகரணங்கள் பலவற்றிற்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் நேற்று வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானிக்கு அமைய 60 வகையான மருந்துகள் மற்றும் நான்கு வகையான வைத்திய உபகரணங்கள் என்பனவற்றுக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: