முகமாலை இந்திராபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை மீள்குடியேற்றம்!
Thursday, December 1st, 2016
முகமாலை இந்திராபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை மீள்குடியேற்ற நிகழ்வொன்று நடைபெறவுள்ளது. கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் 55வரையான குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளன.
இதற்கான ஒழுங்குகளை பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே முகமாலையின் பொந்தர் குடியிருப்புப் பகுதியில் நூறுக்கு மேற்பட்ட குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளன. எனினும் முகமாலை றோ.க.த.க பாடசாலையும் தற்காலிகக் கட்டத்தில் இயங்கி வருகின்றமை தெரிந்ததே.

Related posts:
இரணைத்தீவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!
சாவகச்சேரியில் கொள்ளைச் சம்பவம் - தம்பதியினர் படுகாயம்!
வளிமண்டலவியல் திணைக்களத்தின் ரேடார் அமைப்பின் கட்டுமான பணிகளின் தோல்வி - அரசாங்கத்துக்கு 78 மில்லியன...
|
|
|


