சாவகச்சேரியில் கொள்ளைச் சம்பவம் – தம்பதியினர் படுகாயம்!
Friday, April 10th, 2020
நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் வீடு புகுந்து கொள்ளையிட்ட சம்பவம் யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் சாவகச்சேரி – மண்டுவில் பிரதேசத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் வீட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் வயோதிபர்களான கணவன், மனைவியை தாக்கி அவர்கள் அணிந்திருந்த 5 பவுண் நகைகள் மற்றும் வீட்டிலிருந்த 16000 ரூபா பணம் ஆகியவற்றைக் கொள்ளையிடப்பட்டுச் சென்றுள்ளனர்.
படுகாயமடைந்த தம்பதியினர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
பொதுமக்களின் அமைதியை பாதுகாக்குமாறு ஆயுதம் தாங்கிய சகல படையினருக்கும் ஜனாதிபதி உத்தரவு!
மாகாண ஆளுநர்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு இடையில் ஒருங்கிணைக்கும் அதிகாரி ஒருவரை நியமிக்கு...
யாழ். மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபராக கே. சிவகரன் கடமையேற்பு!
|
|
|


