யாழ். மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபராக கே. சிவகரன் கடமையேற்பு!
Wednesday, July 2nd, 2025
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபராக திரு. கே. சிவகரன் அவர்கள் நேற்றையதினம் (01.07.2025) காலை 08.45 மணிக்கு அரசாங்க அதிபர் முன்னிலையில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், உதவி மாவட்டச் செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளடங்கலான பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.
மேலதிக அரசாங்க அதிபராக கடமையேற்ற திரு கே. சிவகரன் அவர்கள் முன்னர் வேலணை பிரதேச செயலாளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டில் குற்றவியல் விசாரணைகள் அதிகரித்துள்ளது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!
இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் தொடர்பில் அவசர எச்சரிக்கை!
கணக்காய்வு அதிகாரிகளுக்கு சுமார் 400 பதவி வெற்றிடங்கள் - கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவிப்பு!
|
|
|


