மிருக பலியை தடைசெய்ய விரைவில் சட்டம்!
Tuesday, May 31st, 2016
இந்து ஆலயங்களில் அனைத்து வகையான மிருக பலிகளை தடைசெய்யும் வகையில் விரைவில் சட்டம் கொண்டுவரப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அடுத்த வாரம் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.
மிருக பலியை தடைசெய்யும் வகையில் இந்து மத மற்றும் கலாசார விவகார திணைக்களம் தயாரித்துள்ள சட்ட வரைபுக்கு சட்டவரைஞர் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
மதச் சடங்குகளின் ஒரு பகுதியாக மிருகங்கள் பலியிடப்படுவதற்கு எதிராக பல்வேறு சந்தர்ப்பங்களில் இதற்கு முன்னர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன.
வட மாகாணத்திலுள்ள இந்து ஆலயங்களில் மிருகங்களை பலியிடும் நிகழ்வு தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாக திணைக்களம் கூறியுள்ளது.
குறிப்பாக பல்வேறு ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் ஆகிய பிரதேசங்களில் இந்த நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
|
|
|


