பெரியவர்களின் தவறுகள் பிள்ளைகளைப் பாதிக்கும் –  யாழ். அரச அதிபர் சுட்டிக்காட்டு!

Wednesday, January 4th, 2017

பெரியவர்கள் விடும் தவறுகள் எதிர்காலத்தில் பிள்ளைகளைளே பாதிக்கும். நற்பண்புள்ள பிள்ளைகளை வளர்த்தெடுப்பதில் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் முக்கிய பங்கிருக்கின்றத என யாழ். அரச அதிபர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

ஆறுதல் நிறுவனம் எதிர்காலத்தில் அனைத்து முன்பள்ளிகளையும் இணைத்துச் செயற்படவுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்கது. இன்றைய காலத்தின் தேவையாகவும் இருக்கின்றது. முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்க வேண்டிய தேவைகளும் இருக்கின்றன. ஆறுதல் நிறுவனங்கள் 3 ஆயிரம் முன்பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கியுள்ளனர்.

பிள்ளைகளின் பண்புகளை சிறப்புற வளர்த்துக்கொள்ள வேண்டும் பெற்றோர்களுக்கு ஆடத்தபடியாக அசிரியர்களே இருக்கின்றனர். எனவே ஆசிரியர்கள் எதைப் பழக்குகின்றனரோ அதனையே பிள்ளைகளும் பின்பற்றுகின்றனர். சிலவேளைகளில் பெற்றோர்கள் சில விடயங்களைச் செய்யும் போது எங்களின் ஆசிரியர்கள் இப்படித்தான் செய்ய வேண்டும் எனக்கூறி இருக்கின்றனர் எனச் சொல்லகப்படுகின்ற நிலைமையும் காணப்படுகிறது. ஆசிரியர்கள் நன்கு பயிற்சி பெற்று விசாலமாகச் செயற்பட வேண்டும்.

கடந்த கால முன்பள்ளிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கொடுக்கும் வகையில் அமையும் என நினைக்கின்றேன். இங்கு பல  அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் கல்வியியலாளர்கள் என பலர் பக்கபலமாக இருக்கின்றனர். முன்பள்ளி தொடர்பில் மிகவும் பிரகாசமான வளர்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றார்.

vetanajakang987488956

Related posts: