மின் தாக்கி சமுர்த்தி உத்தியோகத்தர் பலி!
Monday, May 2nd, 2016
சுதுமலை, அம்மன் கோயில் பகுதியில் கடந்த சனிக்கிழமை (30) இரவு மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர், உடுவில் பிரதேச செயலகத்தில் சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் நாகையா செந்தூர்செல்வன் (வயது 44) எனப் பொலிஸார் கூறினர்.
நீர் இறைக்கும் இயந்திரத்தின் ஆழியினை போடும் போது திடீரென ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக இவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம், பிரதே பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
Related posts:
மாம்பழ உற்பத்தியில் ஈடுபட விரும்பும் விவசாயிகள் பதிவை மேற்கொள்ளவும் - வடக்கு விவசாய திணைக்களம் !
சமுர்த்தி பெண் உத்தியோகத்தரால் தற்கொலை செய்துகொண்ட குடும்பஸ்தர்: அநாதையாக்கப்பட்ட பிள்ளைகள்!
இராணுவத் தலைமையகம் உத்தியோக பூரவமாக புதுவருட கடமை ஆரம்பம்!
|
|
|


