மாம்பழ உற்பத்தியில் ஈடுபட விரும்பும் விவசாயிகள் பதிவை மேற்கொள்ளவும் – வடக்கு விவசாய திணைக்களம் !

Saturday, June 23rd, 2018

உலக வங்கி நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் விவசாய நவீன மயமாக்கல் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அதன் முன்னோடி செயற்பாடாக யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரி விவசாய போதனாசிரியர் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் புதிய இன  TOM EJC மாம்பழ செய்கையை அபிவிருத்தி செய்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அதனுடன் இணைந்ததாக ஊடு பயிராக நிலக்கடலை செய்கையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இம் மாம்பழ செய்கை செயற்பாட்டில் தெரிவு செய்யப்படுகின்ற பயனாளிகள் உடனடியாக ஆரம்ப காலத்தில் மாம்பழ செய்கையுடன் ஊடுபயிராக நிலக்கடலை செய்கையிலும் ஈடுபடுத்தப்படுவர்.

இந் நோக்கத்திற்காக தெரிவு செய்யப்படும் பயனாளிகளுக்குப் பின்வரும் உதவிகள் நன்கொடையாக குறிப்பிட்ட செயற்றிட்டத்தினால் வழங்கப்படும்.

  • நீர் இறைக்கும் இயந்திரம்
  • தூவல் முறை நீர்ப்பாசன உபகரணங்கள்

குறிப்பிட்ட செயற்றிட்த்தில் பயனாளிகளாக இணைய விருப்பம் உடையவர்கள் கீழ்வரும் தகுதிகளை கொண்டிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  • மாந்தோட்டம் அமைக்கப்படக்கூடிய ஒரு ஏக்கர் (16 பரப்பு) பல்லாண்டு பயிர்கள் அல்லாத பாதுகாப்பான காணி
  • நீர்ப்பாசன வசதி

இச்செயற்றிட்டத்தில் இணைந்துகொள்ள ஆர்வமுள்ள சாவகச்சேரி கமநல கேந்திர நிலையத்தின் கீழ் உள்ள பயனாளிகள் தமது பதிவுகளை சாவகச்சேரி கமநல கேந்திர நிலையத்திலுள்ள விவசாய போதனாசிரியர் பிரிவிலோ அல்லது இல.127, கச்சேரி நல்லூர் வீதியில் அமைந்துள்ள விவசாய நவீன மயமாக்கல் வடமாகாண செயற்றிட்ட காரியாலயத்திலோ எதிர்வரும் 30.06.2018 ஆம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளுமாறு வடமாகாண விவசாய நவீன மயமாக்கல் செயற்றிட்ட பிரதி திட்டப்பணிப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts: