தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நவீனமயப்படுத்தப்பட்ட கதிரியக்கச் சிகிச்சைப் பிரிவு இயங்க முடியாத நிலை!

Monday, July 11th, 2016

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையுடன் இணைந்த வகையில் செயற்பட்டு வரும் புற்றுநோய் வைத்தியசாலைக்கு அருகில் நவீனமயப்படுத்தப்பட்ட கதிரியக்கச் சிகிச்சைப் பிரிவுக்குரிய கட்டுமானப் பணிகள்  நிறைவு பெற்றுப் பல மாதங்கள் கடந்த போதும் அதற்கான உபகரணங்கள் இதுவரை வழங்கப்படாத காரணத்தால் இயங்க முடியாதுள்ளதாகவும், இதன் காரணமாக  புற்று நோயாளர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க முடியாதுள்ளதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

புற்றுநோய் ஆதார வைத்தியசாலையை அண்டிய பகுதியில் விசாலமான வகையில் மேற்படி சிகிச்சைக்கான கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டடம் இயங்காத நிலையில் காணப்படுவதால் கட்டடத்தைச் சூழவுள்ள பகுதி கட்டக் காலி நாய்களின் தங்குமிடமாக மாறியுள்ளது.

இந்த விடயத்தில் மத்திய சுகாதார அமைச்சு உடனடியாகத் தலையிட்டுத் தீர்வு பெற்றுத் தர வேண்டும் என்பது புற்றுநோயாளர்களதும், வைத்தியசாலைச் சமூகத்தினரதும் கோரிக்கையாகவுள்ளது.

Related posts: