மாத்தறையில் தொற்று நோயின் தாக்கம் அதிகரிப்பு மக்களைஅவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

Wednesday, June 7th, 2017

சீரற்றகால நிலையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான மாத்தறை மாவட்டத்தில் தொற்று நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாக மக்களை அவதானமாக இருக்குமாறும் சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்தமாத இறுதியில் நிலவிய சீரற்ற காலநிலையால் நாட்டின் பலபாகங்களிலும் பெருமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களினால் மக்கள் பல்வேறுபட்ட அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மாத்தறை மாவட்டமும் ஒன்றென்பதுடன் பாதிக்கப்பட்ட மாவட்டத்திற்கு மக்கள் திரும்பிவரும் நிலையில், அங்குதொற்று நோய்கள் பரவக் கூடியசாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாகவும், இவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் முகமாக சுகாதாரத்துறையினரால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை மக்கள் கடைப்படிக்கவேண்டியது அவசியமான என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாககர்ப்பவதிகள், குழந்தைகள் உள்ளிட்டவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறும்; அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண் சரிவு அபாயம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மறு அறிவித்தல் வரையில் குறித்த பகுதிகளுக்கு செல்லவேண்டாமென்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: