மாணவர்களே எச்சரிக்கை! உற்று நோக்குகின்றது சட்டம்!
 Friday, November 11th, 2016
        
                    Friday, November 11th, 2016
            
2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பிலான வாசிப்பு நேற்றையதினம்(10) நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
நாட்டில் தற்போது பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளில் இடம் பெற்றுவரும் பகுடிவதைகள் ஏராளம். இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய திட்டங்களை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.
இவ்வாறான செயல்களை தடுக்கும் நோக்கில்,பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பகிடிவதை குறித்து அறிவிப்பதற்கு புதிய நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் இதற்காக ஒரு கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts:
4129 அந்தர்  உருளைக்கிழங்கு விநியோகம்!
தென்னைப்பயிர்ச் செய்கையாளர்களுக்கு கடந்த வருட மானியம் விரைவில் வரும்!
தொழில் நுட்பங்களை வலுப்படுத்துவதனூடாக கோழி வளர்க்கும் தொழிலை ஒரு மக்கள் தொழிலாக மாற்றமுடியும் - பிரத...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        