மாணவனை தாக்கி காயப்படுத்திய ஆசிரியர் கைதாகி விளக்கமறியலில்!

பரீட்சை எழுதிக்கொண்டிருந்த மாணவனுக்கு அடித்துக் காயம் ஏற்படுத்தியமை, மற்றும் சக ஆசிரியர் உட்பட ஏழு மாணவர்களை அறையில் பூட்டி திறப்பு எடுத்தமை போன்ற குற்றச்சாட்டில் கைதான ஆசிரியர் இன்று திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஆசிரியர் மல்லாகம் மாவட்ட நீதிமன்ற பதில் நீதிவான் ஆர்.வசந்தசேனன் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது அவர் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.
வலி.கிழக்கில் உள்ள பாடசாலை ஒன்றின் தொழில்நுட்ப ஆய்வுக்கூடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 8 மாணவர்கள் பரீட்சை எழுதிக்கொண்டிருந்துள்ளனர். இதன்போது திடீரென வகுப்பறைக்கு வந்த ஆசிரியர் ஒரு மாணவனை கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் அம் மாணவன் வெளியில் வந்தமை அடுத்து பரீட்சை எழுதிக்கொண்டிருந்த ஏழு மாணவர்களையும், ஆசிரியர் ஒருவரையும் அறையில் வைத்து பூட்டி திறப்பினை எடுத்துள்ளார். காதில் இருந்து குருதி வடித்த நிலையில் மீட்கப்பட்ட மாணவன் சக மாணவர்களின் உதவியுடன் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு பாடசாலை நிர்வாகத்தினர் வழங்கிய தகவலை அடுத்து ஆசிரியரை பொலிஸார் கைது செய்தனர்.
Related posts:
|
|