அமைச்சரவை பத்திரம் தொடர்பிலும் கோரிக்கை விடுக்கலாம் தகவல் திணைக்களப் பணிப்பாளர் தெரிவிப்பு!

Saturday, July 8th, 2017

“அமைச்சரவைப் பத்திரம் என்பது இரகசியமான ஆவணம். அதனால் தான் நாங்கள் தகவலறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளோம். அதன்மூலமாக எந்தவொரு பத்திரத்துக்கும் நீங்கள் கோரிக்கை விடுக்கலாம்” என அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் கலாநிதி ரங்க கலன்சூரிய தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் (05) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ​அமைச்சரவைப் பத்திரத்தை இன்னும் சமர்ப்பிக்கவில்லையே என? ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்

“அமைச்சரவைச் சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவுகளை வழங்கும் பொறுப்பு மட்டும் தான் எனக்கு வழங்கப்பட்டுள்ளது.“முதலாவது அமைச்சரவைப் பத்திரத்தை நாங்கள் அங்கீகரிப்போம். அதன் பின்னர் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முன்னைய அமைச்சரவைக் கூட்டத்தின் தொகுப்பறிக்கையை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். அதுவரை எந்தவிதத் தகவலையும் நாங்கள் வழங்க முடியாது.

பிரச்சினை என்னவென்றால் அமைச்சரவைப் பத்திரத்தை எவ்வாறு வழங்குவது என்பது தான். அமைச்சரவைப் பத்திரம் என்பது இரகசியமான ஆவணம். அதனால் தான் நாங்கள் தகவலறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளோம். அதன்மூலமாக எந்தவொரு பத்திரத்துக்கும் நீங்கள் கோரிக்கை விடுக்கலாம்” என்றார்

Related posts: