மாடு மேய்க்கச் சென்றவர் சடலமாக மீட்பு!

Thursday, December 29th, 2016

மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற சிறு பண்ணையாளர் நாவற்குளி பாலத்துக்கு அருகில் உள்ள கடற்கரையருகில் சடலமாக மீட்கப்பட்டார். நாவற்குளி சித்திவிநாயகர் ஆலயப் பகுதியில் வசிக்கும் இளையதம்பி தர்மகுலசிங்கம் என்பவர் சிறு பண்ணையமைத்து மாடுகள் வளர்த்து வருகிறார்.

காலபோக நெற்செய்கை ஆரம்பித்துள்ளதையடுத்து பிற்பகல் வேளைகளில் அவற்றைப் பாதுகாப்பாகத் தரவைப் பகுதிகளில் மேய்ச்சலுக்கு விட்டு மாலையானதும் அழைத்து வந்து பண்ணையில் கட்டி வைத்திருப்பார். தென்மராட்சி தெற்குப் பகுதியில் அண்மைக் காலமாக கால்நடைகள் திருட்டு போவதையடுத்து தானே நேரடியாக மாடுகளை அழைத்துச் சென்று மேய்ச்சலுக்கு விட்டு விட்டு காத்திருந்து வீட்டுக்கு அழைத்து வருவார். நேற்று முன்தினம் பிற்பகலில் மாடுகளை அழைத்துக்கொண்டு நாவற்குளி கரிப்பாலமருகே மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு மர நிழலில் இருந்துள்ளார். மாலையானதும் மாடுகள் வீடு திரும்பியுள்ளன. இவர் வராததால் தேடிச் சென்ற போது சடலமாகக் காணப்பட்டார். இது தொடர்பாகச் சாவகச்N;சரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு பொலிஸார் விறைந்து சடலத்தை மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலை சவச்சாலையில் ஒப்படைத்தனர். முதியவரின் சாவு தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

death165fvr23

Related posts: