ரவிராஜ் படுகொலை வழக்கு: அறுவருக்கு  எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை!

Friday, July 22nd, 2016

யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது மெய்பாதுகாப்பாளராக இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் லக்ஷ்மன் ஆகியோரை  படுகொலை செய்த விவகாரம் தொடர்பில் கடற்படை அதிகாரிகள் மூவர் உள்ளிட்ட  6 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபர் இன்று  கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தார்.

பழனிச் சாமி சுரேஷ், ஹெட்டி ஆரச்சிகே பிரசாத் சந்தன குமார, காமினி செனவிரத்ன, பிரதீப் சமிந்த, சரன் எனப்படும் சிவகாந்தன் விவேகானந்தன், பெபியன் வொய்ஸ்டன் டூசைன் ஆகியோருக்கு எதிராகவே சட்ட மா அதிபரால் பயங்கரவாத தடை சட்டம் மற்றும் தண்டனை சட்டக் கோவையின் விதிவிதானங்களுக்கு அமைவாக இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய சார்பில் இன்று  கொழும்பு மேல் நீதிமன்றின் முதலாம் இலக்க விசாரணை அறையின் நீதிபதி மணி லால் வைத்தியதிலக முன்னிலையில் பிரதி சொலிசிற்றர் ஜெனரல் ரொஹந்த அபேசூரிய இந்த குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தார்.

Related posts: