பச்சிலைப்பள்ளியில் 2221 கிணறுகள் தேவை!

Tuesday, September 5th, 2017

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலர் பிரிவில் மீள்குடியேறிய பகுதிகளில் இரண்டாயிரத்து 221 கிணறுகள் தேவையுள்ளதாக பிரதேச செயலப் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான தேவைகள் பல்வேறு திட்டங்களினூடாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இருந்தும் பல்வேறு தேவைப்பாடுகள் காணப்படுகின்றன.  இது தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தினால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரத்தின் படி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் இதுவரை மூவாயிரத்து 937 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன.

இவ்வாறு மீள்குடியேறிய குடும்பங்களில் இரண்டாயிரத்து 761 குடும்பங்களுக்கான வீட்டுத் தேவைகள் நிறைவு செய்யப்பட்டுள்ள போதும், ஆயிரத்து 176 வீட்டுத் தேவைகள் காணப்படுகின்றன.

அத்துடன் 232 பகுதி திருத்த வீடுகள் காணப்படுகின்றன. இதில் 25 வீடுகளுக்கு மாத்திரம் புனரமைப்புக்களை நிதிகள் கிடைக்கப் பெற்றுள்ளன.ஏனைய 207 வீடுகளுக்கான நிதிகள் கிடைக்கப் பெறவில்லை. இதேவேளை இப்பகுதியில் ஆயிரத்து 665 தனியார் கிணறுகள் காணப்படுகின்றனர். இவை தவிர இரண்டாயிரத்து 221 கிணறுகளுக்கான தேவைப்பாடுகள் காணப்படுகின்றன.

அத்துடன், இதுவரை மூவாயிரத்து 570 மலசல கூடங்கள் அமைக்கப்பட்டுள்ள போதும் 367 மலசல கூடங்களுக்கான தேவைகள் காணப்படுகின்றன. மேலும் 958 பேருக்கான வாழ்;வாதார உதவிகள் தேவையெனவும் 41 புதிய காணிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும் 16 பேருக்கு காணிகளை வழங்க வேண்டியிருப்பதாகவும் மேற்படி புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: